News April 23, 2025
விழுப்புரத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்

▶️ மரக்காணம் கடற்கரை,
▶️ திருவக்கரை புவியியல் பூங்கா,
▶️ஆரோவில்,
▶️ மேல்சித்தாமூர் குடவறை கோவில்,
▶️மண்டகப்பட்டு குகை கோயில்,
▶️ சட்-அட்-உல்லா கான் மசூதி,
▶️ செஞ்சி மதிற்சுவர்,
▶️ செஞ்சி கோட்டை.
உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்து இங்கெல்லாம் போக பிளான் போடுங்க
Similar News
News November 21, 2025
விழுப்புரம்: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மனித உடல்!

விழுப்புரம்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் (52), 7 ஆண்டுகளாக சின்னகோட்டக்குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இமாச்சல் பிரதேசத்தில் உள்ள இவரது மனைவி அச்லா, இவரை 4 நாட்களாக தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், போலீசார் வந்து கதவை திறந்து பார்த்த போது, அலெக்சாண்டர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 21, 2025
விழுப்புரம்: அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுப்பு!

விழுப்புரம் வட்டம், பரசு ரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா, சேர்ந்தனூர் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவர், புதன்கிழமை சேர்ந்தனூரில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த, சிவமுருகன் என்பவர் கிராம நிர்வாக அலுவலரைத் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 21, 2025
விழுப்புரம்: மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை!

விழுப்புரம்: ஓமிப்பேரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (35). இவருக்கு மதுப்பழக்கம் இருந்த நிலையில், இவரது மனைவி ராகசுதா கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த பாலமுருகன், பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துள்ளார். பின்னர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸார் நேற்று (நவ.20) வழக்குப் பதிந்தனர்.


