News January 2, 2025
விழுப்புரத்தில் ஒரே நாளில் 102 பேர் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜன.1) புத்தாண்டையொட்டி அனைத்து சோதனைச் சாவடிகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் 102 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News October 16, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் (அக்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
விழுப்புரம்: குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நவம்மாள் மருதூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரவீன் என்பவர் கடந்த செப்டம்பர் 15ஆம் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், இன்று அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News October 15, 2025
விழுப்புரம் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

விழுப்புரம் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற<