News April 21, 2025
விழுப்புரத்தில் எஸ்.ஐ. தேர்வுக்கு இலவச பயிற்சி

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றுமுதல்(ஏப்.21) சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அணுகி பதிவு செய்ய வேண்டும் ஷேர் பண்ணுங்க…
Similar News
News April 30, 2025
விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் வி.மருதுார் காளியம்மன் கோவில் அருகில், ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைபொருள் பிரிவிற்கு தகவல் கிடைத்தது. தனி தாசில்தார் ஆனந்தன் மற்றும் ஆர்.ஐ.,க்கள் கண்ணன், லட்சுமிநாராயணன்,சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். 25 மூட்டைகளில்,1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக குடோனிற்கு அனுப்பி வைத்தனர்.
News April 30, 2025
அக்ஷய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

அன்னை மகாலட்சுமி செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். அந்தவகையில் அக்ஷய திருதியான இன்று(ஏப்.30) விழுப்புரத்தில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிலுக்கு சென்று அன்னையின் அருளை பெற்று விட்டு தங்கம் வாங்க செல்லுங்கள். காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். செல்வ வளமும், எல்லா வளமும் கிடைக்கும். ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (29.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.