News September 14, 2024
விழுப்புரத்தில் இறுதி கல்லூரி கலந்தாய்வு

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கான இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை வரும் செப்.19-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடக்க உள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், இக்கலந்தாய்வில் டி.சி உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
விழுப்புரம்: மின் ஊழியர் வாகனம் மோதி பரிதாப பலி!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த எறும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்(50). இவர் சத்தியமங்கலம் மின்சார அலுவலகத்தில் மின்சார பணியாளராக பணிபுரிந்து வருகிறார். பணிக்காக புதுச்சேரி திருவண்ணாமலை சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். நல்லான் பிள்ளை பெற்றால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம்: வளர்ப்பு நாயால் முதியவருக்கு கொலை மிரட்டல்!

விழுப்புரம்: ஆரோவில் பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணா தேவநாதன். இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி இவரது நாய் பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் பற்குணன், கிருஷ்ண தேவநாதனை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.