News August 14, 2024
விழுப்புரத்தில் அமைச்சர்கள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்து பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மழைநீரில் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் கே. என் நேரு, க. பொன்முடி ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் குறித்த ஆய்வு செய்தனர்.
Similar News
News October 22, 2025
விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News October 22, 2025
விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கவும். TNSDMA. இன்று அதிகாலை முதலே விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர் .
News October 22, 2025
விழுப்புரம் காவல்துறை இளைஞர்கள் தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்

வடகிழக்கு பருவமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இளைஞர்கள், தன்னார்வலர்கள் பழைய கட்டிடங்கள், தாழ்வான பகுதிகள் , ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளை ஒட்டி வசிப்பவர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறைக்கு தகவல் அளிப்பதோடு, தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்குவதற்கு உதவுமாறு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர உதவிக்கு 1077,04146-223265,9498100485.