News August 9, 2024
விழுப்புரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
விழுப்புரம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

விழுப்புரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 18, 2025
விழுப்புரம்: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வடகோட்டிப்பாக்கம் கிராமத்தில் மரக்காணம்- திண்டிவனம் சாலையோரம் மின்மாற்றியில் நேற்று பழுது ஏற்பட்டிருந்தது. இதனை சரி செய்ய முருக்கேரி துணைமின் நிலைய மின் ஊழியர்கள் 10 பேர் சென்றிருந்தனர். அப்போது, திடீரென மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியரான ரகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 18, 2025
விழுப்புரம்: பட்டாவில் திருத்தம் செய்வது இனி ஈஸி!

விழுப்புரம் மக்களே! தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் & புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.