News March 19, 2024
விழுப்புரத்திற்கு மத்திய பாதுகாப்பு படையினர் வருகை

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வகையில், டிஎஸ்பி ரவாத் தலைமையில், காவல் ஆய்வாளா் ஜெகதீஷ் மற்றும் 89 போலீஸாா் கொண்ட மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை குழுவினா் நேற்று (மார்ச் 18) விழுப்புரத்துக்கு வந்தனா். இவா்கள், காகுப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News October 26, 2025
விழுப்புரத்தில் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கு: ஆட்சியர் தகவல்

விழுப்புரத்தில் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள் குறித்த கருத்தரங்கு அக்.28ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாலம்மாள் வணிக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு 8925534035/9443728015 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
கார் மோதி விபத்து – ஒருவர் பலி; இருவர் படுகாயம்

விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் பகுதியில் உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அக்.25 மாலை கார் மோதிய விபத்தில், விழுப்புரம் அடுத்த வேலியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திமுக கிளை கழகச் செயலாளர் ராமதாஸ் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து விழுப்புரம் தாலூகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


