News December 4, 2024
விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தல்

நெல்லை மாநகர காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வங்கிகள், கொரியர் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் சைபர் குற்றவாளிகளின் ஆடியோ, வீடியோ அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இவர்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதாக அச்சுறுத்துவார்கள் அல்லது உடனடியாக பணப்பரிமாற்றம் செய்ய சொல்வார்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.
Similar News
News December 4, 2025
நெல்லை: இளைஞரிடம் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி ராஜீவ் காந்தி நகரில் ரோந்து போலீஸார் சாக்குப்பையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை விரட்டி பிடித்தனர். இப்ராஹிம் ரசீக் (22) என்பவரிடம் 4.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய தங்கதுரையுடன் சேர்ந்து 5 கிலோ கஞ்சா வாங்கி 900 கிராம் விற்பனை செய்தது தெரியவந்தது. இப்ராஹிம் ரசீக்கை கைது செய்த போலீஸார் தங்கதுரையை தேடி வருகின்றனர்.
News December 4, 2025
நெல்லையில் அரசு வேலை! உடனே APPLY

திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் காலியாக உள்ள MIS analyst என்கிற வெளி ஆதார முறைகளான ஒரு தற்காலிக பணியிடத்திற்கு மாதம் 25,000 ஊதியத்தில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது. பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென் பொறியாளர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
News December 4, 2025
நெல்லை: Ex ராணுவ வீரரை சரமாரியாக தாக்கிய தந்தை, மகன்

விகேபுரம் அருகே முதலியார்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் செல்வம் (47) என்பவரை, இடப் பிரச்னை காரணமாக அதே ஊர் தர்மர் மற்றும் அவரது மகன் ஆதிலட்சுமணன் (27) ஆகியோர் நேற்று சரமாரியாகத் தாக்கினர். படுகாயமடைந்த செல்வம் நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விகேபுரம் போலீசார் தர்மர் மற்றும் ஆதிலட்சுமணனை கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.


