News April 23, 2025
விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2025-2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதிகளில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. கடைசி நாள்:மே.5 மாலை 5 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
தென்காசி: விதிமீறினால் சிறை.. கலெக்டர் எச்சரிக்கை!

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் வேலை அளிப்பவர்களுக்கு ரூ.50,000 அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடத்தி குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
News December 19, 2025
தென்காசி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

பட்டாவில் இருந்து மாற்ற <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க
News December 19, 2025
தென்காசி: இலவச கார் ஓட்டுனர் பயிற்சி – APPLY!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இலத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஊரக வேலைவாய்ப்பு மையத்தின் கீழ் நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சிக்கான வகுப்பு ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. எனவே கிராமப்புறத்தை சார்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட ஆவணங்களுடன் நேரில் அலுவலகத்தை அணுகவும்.


