News March 26, 2025

விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

image

தி.மலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவர்கள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் ஏப்ரல் 6 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாநில அளவிலான தேர்வுகள் ஏப்ரல் 8 காலை 7 மணிக்கு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News November 17, 2025

ALERT: தி.மலையில் கனமழை பெய்யும்!

image

தி.மலை மாவட்டத்தில் இந்து இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எனவே இன்று முதல் பரவலாக மழையை ஏதிர்பார்க்கலாம் மக்களே! முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.

News November 17, 2025

தி.மலை: அத்துமீறிய அரசு ஊழியர்..வாய் கூசாமல் வசைபாடல்!

image

தி.மலை மாவட்டம், சேத்துப்பட்டை சேர்ந்த கணவரை இழந்த, 35 வயது பெண், அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த சதீஷ்குமார், 36 மேல்வில்லிவலம் வி.ஏ.ஓ.,வாக உள்ளார். இவர் அந்த பெண்ணிடம் “நீ அழகாக இருகிறாய், நீ அழகாக இருக்கிறாய், எப்போது வருகிறாய் என்றும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என வாய் கூசாமல் கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

News November 17, 2025

தி.மலை: ரோந்து பணி விவரங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் (16.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!