News August 9, 2024
விளையாட்டு போட்டி – விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கடந்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்பட்டும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
தேனி: மது போதையில் தூங்கியவர் பலி..!

தேனி மாவட்டம் சத்திரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயன் (45). இவர் நேற்று (செப்.19) அதிக அளவில் மது குடித்துவிட்டு அவரது வீட்டில் உள்ள பெட்ரூமில் படுத்து உறங்கியுள்ளார். வெகு நேரமான காரணத்தினால் அவரது மனைவி உணவு கொடுக்க சென்ற பொழுது விஜயன் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 19, 2025
தேனி: கனிம வளம் கடத்திய 2 லாரி பறிமுதல்

உத்தமபாளையம் மண்டல துணை வட்டாட்சியர் கோம்பை பகுதியில் நேற்று (செப்.18) பார்வையிட சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்த அரசுக்கு சொந்தமான உடை கற்களை கேரள எண் கொண்ட இரண்டு லாரிகளில் ஏற்றி செல்ல முயற்சித்தது தெரியவந்தது. லாரி ஓட்டுநர்கள் தப்பிய நிலையில் இது குறித்த புகாரில் இரண்டு லாரிகளையும் கோம்பை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 19, 2025
தேனி: உயர்கல்வி படிக்க உதவித்தொகை வேண்டுமா..

மத்திய பல்கலை, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி, உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்களுக்கு அத்துறை சார்பில் உதவித்தொகை ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தினை https: //bcmbcmw.tn.gov.in/welfscheme.htm#scholarshipschemes என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.