News August 8, 2024
விளையாட்டு போட்டி – ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் சாரல் விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தென்காசி மாவட்டம் சார்பாக சதுரங்கம், கையுந்து விளையாட்டு போட்டி வரும் 17ஆம் தேதி காலை 7 மணிக்கு குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் நடத்தப்பட உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (ஆக.08) கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News December 2, 2025
தோரணமலை முருகனுக்கு இன்றைய அலங்காரம்

திரவிய நகர் அடுத்துள்ள மாதபுரம் அருகே அமைந்துள்ள தோரணமலை கோயிலில் இன்று காலை வல்லவ விநாயகர் தோரணமலை முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைக்கு பின்னர் மலை அடிவார பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
News December 2, 2025
தென்காசி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்க வழி இருக்கு. இந்த <
News December 2, 2025
தென்காசியில் மாணவர் போக்சோவில் கைது

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவிக்கும், வி.கே. புரத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் ஏமாற்றி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவர் கர்ப்பமானதுடன் குறை பிரசவத்தில் ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. புகாரின் பேரில் ஆலங்குளம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை போக்சோவில் கைது செய்தனர்.


