News August 16, 2024
விளையாட்டுப் போட்டிக்கான ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட இளைஞர் நலன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு குழு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
Similar News
News October 15, 2025
புதுக்கோட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டை இந்திய விடுதலைக்கு பின் மார்ச் 3, 1948-இல் இந்திய பேரரசுடன் இணைக்கப்பட்டு, திருச்சி மாவட்டத்தின் ஒரு கோட்டமாக விளங்கியது. பின்னர் ஜனவரி 14, 1974 அன்று திருச்சி மாவட்டத்தில் இருந்த முன்னாள் புதுக்கோட்டை கோட்டத்தின் சில பகுதிகள் மற்றும் தஞ்சாவூா் மாவட்டத்தின் சில பகுதிகளையும் சோ்த்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. SHARE பண்ணுங்க.
News October 15, 2025
புதுகையில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. இனி அந்த கவலை வேண்டாம். நிலத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய clip.tn.gov.in என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க
News October 15, 2025
புதுகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

புதுக்கோட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <