News March 27, 2024
விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அதிமுக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் பெண் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளனர். இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
Similar News
News November 20, 2025
குமரி மக்களே.. PF குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

வருங்கால வைப்பு நிதி நிறுவனம், நாகர்கோவில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் ஆகிய இணைந்து நடத்தும் வைப்பு நிதி உங்கள் அருகில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் நவ.27ம் தேதி அன்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் வைப்பு நிதி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பயன்பெறலாம் என குமரி வைப்பு நிதி ஆணையர் கூறினார்.
News November 20, 2025
குமரியில் 860 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் போக்குவரத்து விதி மீறல்களுக்காக ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக 860 பேரும் இது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து போலீசார் நேற்று தெரிவித்தனர்.
News November 20, 2025
குமரி: வேலைதேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (நவ 21) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் மூலம் நடத்தப்படும் இம்முகாமில் வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


