News March 25, 2024
விளவங்கோடு அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக ராணி அறிவிக்கப்பட்டுள்ளார் . இவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜாண் தங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Similar News
News December 8, 2025
குமரி: லாரி மோதி இளைஞர் பலி!

மணவாளக்குறிச்சி நடுவூர்கரை பகுதி லாரி டிரைவர் சதீஷ்குமார்(40). இவர் நேற்று (டிச.7) மாலை லாரியில் பொருட்களுடன் குளச்சலில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும்போது தெக்குறிச்சி சேதுபதி (24) பைக்கில் ஆலன்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். திடீரென பைக் மீது லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சேதுபதி சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News December 8, 2025
குழித்துறை, மார்த்தாண்டத்தில் 300 பாஜக-வினர் கைது

கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல இன்று குழித்துறை, படந்தாலுமூடு, புத்தன்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.