News March 25, 2024
விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்., சார்பில் தாரகை கத்பர்ட் போட்டியிடுவதாக சன்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் வி.எஸ்.நந்தினி, அதிமுக சார்பில் சேவகி ராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 16, 2025
நாகர்கோவில்- தாம்பரம் வாராந்திர ரயில் ஒரு மாதம் நீட்டிப்பு

குமரி மாவட்டம் நாகர்கோவில் – தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் சேவையினை ( வண்டி எண். 06012, மற்றும் வண்டி எண். 06011 )கோடை விடுமுறையை முன்னிட்டு மேலும் ஒரு மாதம் தெற்கு ரயில்வே நீட்டிப்பு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது. இதனால் கோடை விடுமுறையை கழிக்க செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News April 15, 2025
நாகர்கோவிலில் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமானது நாளை(16.04.2025) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இதில் 30க்கும் அதிகமான, புகழ்மிக்க நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவைப்படும் தகுந்த நபர்களை வேலைக்கு தேர்வு செய்ய இருக்கிறார்கள் என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News April 15, 2025
மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி குமாரகோவில் சுவாமி தரிசனம்

திருச்சூர் எம்.பியும் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் மற்றும் நடிகருமான சுரேஷ்கோபி இன்று குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.