News November 20, 2024
வில்லியனூரில் வேளாண் விவசாயிகள் திருவிழா

புதுச்சேரி கூடுதல் வேளாண் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம், ஆத்மா திட்டம் மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணைந்து, வேளாண் விவசாயிகள் திருவிழா, நாளை 21ம் தேதி, காலை 9:00 மணியளவில், வில்லியனுார், கோபாலசாமி நாயக்கர் திருமண மஹாலில் நடக்கிறது. தொடர்ந்து, வேளாண் கருத்தரங்கம் நடக்கிறது. விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய முதலவர்

தேக்வாண்டோ மாணவர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கினார். புதுச்சேரியில் தேக்வாண்டோ தற்காப்பு கலை பயிலும் மாணவர்கள், சட்டசபை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்தனர். இந்த கலையில், மாநில அளவில் பிளாக் பெல்ட் எனும் நிலையை அடைந்த, நுாறு மாணவர்களுக்கு சான்றிதழை, முதல்வர் வழங்கினார்.
News December 8, 2025
புதுவை: தவெக கூட்டம் – அனுமதி கிடையாது

புதுச்சேரியில், நாளை டிச.9ம் தேதி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தை நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி கொடுத்தனர். இந்த கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்திருந்த நிலையில், தவெக பரப்புரை கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளது.
News December 8, 2025
புதுச்சேரி: ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 300
3. வயது: 21-30 (SC/ST-35,OBC-33)
4. மாதச்சம்பளம்: ரூ.85,000
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6.கடைசி தேதி: 18.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க


