News December 4, 2024
விற்பனையாளர் கட்டுணர் தேர்வு: 2,398 பேர் ஆப்சன்ட்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுணர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 5,201 விண்ணப்பித்த நிலையில் 3,232 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். கட்டுணர் பணிக்கு 787 பேர் விண்ணப்பித்த நிலையில், 360 பேர் பங்கு பெற்றனர். இந்த தேர்வில் மொத்தம் 2,398 பேர் பங்கேற்கவில்லை.
Similar News
News December 4, 2025
குமரி: டிரைவரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு

கருங்கல் டிரைவர் சாஜிக்கும் (35), ஆப்பிக்கோடு சுஜினுக்கும் முன்விரோதம் இருந்தது. டிச.2.ம் தேதி சாஜி ஆப்பிக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சுஜின், அவரது நண்பர்கள் அசோக், ரதீஷ், சுஜித், ரெஜி ஆகிய 5 பேரும் சேர்ந்து சாஜியை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலி, கையிலிருந்த 5 பவுன் பிரேஸ்லெட்டை பறித்துச் சென்றனர். சாஜி காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி. கருங்கல் போலீசார் விசாரணை.
News December 4, 2025
குமரி: 2,000 லிட்டர் மண்ணெண்ணய் கடத்தல்

நேற்று முன்தினம் (டிச.2) இரவில் கொல்லங்கோடு போலீசார் நீரோடி சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 55 கேன்களில் 2,000 லிட்டர் மானிய விலையில் மீனவர்களுக்கு விற்கப்படும் மண்ணெண்ணய் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து காரையும் பறிமுதல் செய்தனர். கேரளாவுக்கு மண்ணெண்ணய் கடத்த முயன்ற கலிங்கராஜபுரம் டிரைவர் லாலுவை (31) கைது செய்தனர்.
News December 4, 2025
குமரி: டிகிரி போதும்.. ரூ.85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

குமரி மாவட்ட மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <


