News October 24, 2024
விரைவில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாத சோதனை ஓட்டம்

பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் வரும் 26ஆம் தேதி தானியங்கி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி இறுதிவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் மெட்ரோ பணிமனையில் 900 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள Test Driving Track-ல் வைத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது.
Similar News
News December 4, 2025
சென்னை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 4, 2025
சென்னை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 4, 2025
ஏவிஎம் சரவணன் மறைவு : முதல்வர் அஞ்சலி

பிரபல தயாரிப்பாளர் ஏ வி எம் சரவணன் இன்று காலை உயிரிழந்ததை அடுத்து, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு, தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


