News August 7, 2024
விரைவில் முதல்வர் ஜெய் ஸ்ரீ ராம் என கூறுவார்: அண்ணாமலை

சென்னை தி.நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இட ஒதுக்கீட்டில் எந்த சமுதாயமும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இதற்கு முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடவுள் மறுப்பு அரசியல் எடுபடாது என்று திமுகவுக்கு தெரிந்து விட்டது. திமுக செல்லும் போக்கை பார்த்தால் கூடிய விரைவில் முதல்வர் ஜெய் ஸ்ரீ ராம் என கூறுவார்” என்றார்.
Similar News
News October 31, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று (அக்.31) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8th, SSLC, +2, டிகிரி முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில், முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News October 31, 2025
கிராண்ட் மாஸ்டர் ஆன 16 வயது சிறுவன்

சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவன் இளம்பரிதி செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி சாதித்துள்ளார். இதன்மூலம் அவர் தமிழ்நாட்டில் 35 வது கிராண்ட் மாஸ்டர் ஆகவும், இந்தியாவின் 90 வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். செஸ் வீராங்கனை மற்றும் தேசிய விளையாட்டு அணியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் இதற்கு முந்தய 11 ஆட்டத்தில் 9.5 புள்ளிகள் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 31, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (30.10.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.


