News April 1, 2025
விரைவில் திருமணம் ஆக செல்ல வேண்டிய கோயில்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் காயநிர்மலேஸ்வரர் கோயில் ஒரு அக்னி தலமாகும். இக்கோயிலில் உள்ள காயநிர்மலேஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்குமாம். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் கோட்டை எனும் பகுதியில் இக்கோயில் உள்ளது.
Similar News
News April 9, 2025
வடசென்னிமலை முருகன் கோயிலுக்கு சிறப்பு பஸ்கள்

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து வடசென்னிமலை, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் திருக்கோயில்களுக்கு வரும் ஏப்ரல் 11-ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், பங்குனி பௌர்ணமியை முன்னிட்டு, ஏப்.11, 12 தேதிகளில் சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு
News April 9, 2025
வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் சிறப்பு முகாம்

சேலம், நாமக்கல் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு முகாம் வாடிக்கையாளர் சேவை மையங்களில் வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் இணையதளம் மூலம் தங்களின் கருத்துக்கள், பரிந்துரைகள், ஆலோசனைகள், புகார்கள் மற்றும் சேவை கோரிக்கைகளை பதிவு செய்யலாம். என சேலம் பிஎஸ்என்எல் இணை பொதுச்செயலாளர் சுபா தெரிவித்துள்ளார்.
News April 9, 2025
சேலம் குவாரி உரிமம்: இனி ஆன்லைனில்!

சேலம் மாவட்டத்தில் உள்ள குவாரிகளுக்கு உரிமம் பெற விரும்புபவர்கள் இனிமேல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 2025-26 ஆம் ஆண்டுக்கான குவாரி உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஏப்ரல் 15, 2025 முதல் https://www.mimas.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.