News April 13, 2025

விருத்தாசலம் அருகே 390 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

image

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வயலூரில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், 390 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப் பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 6, 2026

கடலூர்: 10th போதும் அரசு வேலை!

image

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு: CLICK <>HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 6, 2026

கடலூர்: வெளுத்து வாங்க போகும் மழை…

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கனமழையும், ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News January 6, 2026

கடலூர்: சாராயம் காய்ச்சியவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

குள்ளஞ்சாவடி போலீசார் கிருஷ்ணன்பாளையத்தில் உள்ள செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கரும்பு வயலில் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த சரவணன் (39) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார், சரவணனை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.

error: Content is protected !!