News April 14, 2024
விருதுநகர: மூலிகை கிட்டங்கியில் தீ விபத்து!

வெம்பக்கோட்டை அருகே எட்டக்காப்பட்டியில் உள்ள தனியார் மூலிகை தயாரிப்பு கிடங்கில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீ விபத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயற்கை மூலிகை பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 22, 2025
கே.டி.ராஜேந்திரபாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஶ்ரீவி நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவ.21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் டிச.19.க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
பைக் திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் வஉசி நகரை சேர்ந்தவர் அருண்குமார். வீட்டின் முன் நிறுத்தி இருந்த இவரது பைக்கை கடந்த 18-ம் தேதி இரவு மர்ம நபர்கள் இருவர் திருடி சென்றனர். ஶ்ரீவி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சந்தோஷ் (18), தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட இருவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.
News November 21, 2025
ஸ்ரீவி: தமிழகத்தையே பதற வைத்த வழக்கில் தீர்ப்பு

பரமக்குடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அதிமுக கவுன்சிலர் சிகாமனி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் 5 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


