News May 29, 2024

விருதுநகர்: விவசாயிகளே இதை கவனியுங்கள்

image

சிவகாசி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டு விதையானது விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பெறலாம் என சிவகாசி வேளாண் உதவி இயக்குனர் சுந்தரவள்ளி இன்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 21, 2025

விருதுநகர்: கோடையில் தவிர்க்க வேண்டிய ஆடைகள்

image

▶️செயற்கையான நூலிழைகளால் ஆன ஆடைகள் (Synthetic Fabrics)
▶️இறுக்கமான ஆடைகள் (Tight-Fitting Clothes)
▶️அடர் நிற ஆடைகள் (Dark-Colored Clothes)
▶️கனரக துணிகள் (Heavy Fabrics)
▶️ஃபிளிப் ஃப்ளாப்ஸ் (Flip Flops)
இந்த மாதிரியான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும். இந்த ஆடைகள் வியர்வையை உறிஞ்சி, உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் தோல் எரிச்சலையும் உண்டாக்குகிறது. *ஷேர் பண்ணுங்க*

News April 21, 2025

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு

image

திருச்சுழி அருகே K.மீனாட்சிபுரம் கிராமத்தில் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து வசந்த பாலமுருகன் என்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 21, 2025

விருதுநகர் தேர்தல் வழக்கை புதிதாக விசாரிக்க உத்தரவு

image

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி விஜயபிரபாகரனும், தனக்கு எதிராக வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி மாணிக்கம் தாகூரும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை தொடக்கத்தில் இருந்து புதிதாக விசாரிக்க இன்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!