News April 25, 2025

விருதுநகர்: ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணி

image

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ள நிலையில் மாத ஊதியமாக ரூ.19900 வழங்கப்படும் .இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை rrbchennai.gov.in என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விருதுநகர் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News July 11, 2025

சிவகாசி: ரகசிய ஆய்வில் பட்டாசு தயாரித்த 9 பேர் கைது

image

சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்து அனுப்புவதாக கிடைத்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் ரகசிய ஆய்வு செய்தனர். அதில் விஸ்வநத்தம் பகுதியில் 3 பேர், மீனம்பட்டியில் 4 பேரை கைது செய்தனர். இதேபோல் தங்கள் வீட்டின் அருகே தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்த மீனம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் பட்டாசு தயாரித்ததாக ஒரே நாளில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News July 10, 2025

சிவகாசி: குடும்பமே விபத்தில் சிக்கிய கொடூரம்

image

சிவகாசி அருகே கோணம்பட்டியை சேர்ந்தவர் மாதவநாதன் (39). இவர் தனது மனைவி ஷோபனா (32), மகள் நித்யாஸ்ரீ(2) ஆகியோருடன் பைக்கில் வந்துள்ளார். மயிலாடுதுறை பேருந்து நிறுத்தம் அருகே பாண்டீஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த பைக் மாதவநாதன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் மாதவநாதன், ஷோபனா, நித்யாஸ்ரீ ஆகியோர் காயமடைந்து சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை.

News July 10, 2025

விருதுநகரில் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். இ-ஸ்கூட்டர் வாங்க உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!