News April 25, 2025
விருதுநகர்: ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணி

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ள நிலையில் மாத ஊதியமாக ரூ.19900 வழங்கப்படும் .இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை rrbchennai.gov.in என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விருதுநகர் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News September 15, 2025
விருதுநகர்: கடன் தொல்லையால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் பாலகுமார் என்பவர் தன்னுடைய நிலம் மற்றும் மற்றொருவரின் நிலத்தையும் குத்தகைக்கு எடுத்து கடனை வாங்கி விவசாயம் பார்த்து வந்துள்ளார். விவசாயம் சரிவர இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டள்ளது. இதனால் கடனை கட்ட முடியாததால் மன உளைச்சலில் இருந்த பாலகுமார் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News September 15, 2025
விருதுநகரில் ஆறு ஆண்டுகளாக அவலம்

விருதுநகர் கருமாதி மடம் எம்.ஜி.ஆர்.,சிலை அமைந்துள்ள பகுதியில் நான்கு புறங்களில் இருந்து ரோடுகள் சந்திக்கின்றன. விருதுநகரில் இருந்து கலெக்டர் அலுவலகம், சிவகாசி ரோட்டில் இருந்து அருப்புக்கோட்டை பாலம் ஆகிய ரோடுகளில் தினசரி ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர்.ஆனால் இந்த சிக்னல் 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் செயல்பாட்டிற்கு கொண்டு வராததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
News September 15, 2025
சிவகாசி அருகே சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

சிவகாசியில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் விளாம்பட்டி, மாரனேரி பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் குறுகலான நிலையில் சாலை உள்ளதால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை விரிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.