News April 28, 2025

விருதுநகர்: மே1 ஆம் தேதி கிராம சபை கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராமஊராட்சிகளில் தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராமஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல் (01.04.2024 முதல் 31.03.2025 வரை), இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

Similar News

News September 18, 2025

காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

image

பாண்டிச்சேரியில் இருந்து காரில் விருதுநகர் நோக்கி மது பாட்டில்கள் கடத்தி வருவதாக விருதுநகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரட்டி வருவதை அறிந்த நபர் அருப்புக்கோட்டை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் வாகன காப்பகத்தில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனையடுத்து போலீசார் கார் மற்றும் 480 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 17, 2025

அருப்புக்கோட்டையில் சாமி சிலை உடைப்பு

image

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலையம்பட்டி அருகே பொய்யாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது இருவாக்காளியம்மன் கோவில். இன்று காலையில் இருவக்காளியம்மன் சுவாமியின் சிலை உடைக்கப்பட்டு இருப்பது கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 17, 2025

விருதுநகர் மாவட்டத்தின் அடிப்படை உதவி எண்கள்

image

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -04562 – 252600, 252601, 252602, 252603
▶️காவல் கட்டுப்பாட்டு அறை -100
▶️விபத்து உதவி எண் -108
▶️தீ தடுப்பு, பாதுகாப்பு -101
▶️விபத்து அவசர வாகன உதவி -102
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️பேரிடர் கால உதவி – 1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு பற்றி தகவல் அளிக்க உதவி எண் – 9443967578 *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!