News September 12, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை விற்பனை கண்டுபிடிக்கப்பட்டால் முதல் முறை ரூ.25,000 அபராதமும் 15 நாட்கள் கடை மூடி சீல் வைக்கப்படும். இரண்டாவது முறை தவறு செய்தால் ரூ.50,000 மற்றும் ஒரு மாதம் கடை மூடி சீல் வைக்கப்படும். மூன்றாவது முறையாக தவறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதமும் மூன்று மாத கடை மூடி சீல் வைக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 22, 2025

விருதுநகர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

விருதுநகர் மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News December 22, 2025

விருதுநகர்: கூலி தொழிலாளி மர்மமான முறையில் மரணம்

image

ராமநாதபுரம் கமுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(33). இவர், திருத்தங்கல்லை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சில மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த காளீஸ்வரன் மதுபோதைக்கு அடிமையாகிய நிலையில் நேற்று அதிவீரன்பட்டி கல் கிடங்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

News December 22, 2025

சிவகாசி: பள்ளி மைதானத்திலே கஞ்சா விற்பனை!

image

சிவகாசி அருகே திருத்தங்கல் தனியார் பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உடனே அங்கு சென்ற போலீசார் கஞ்சா விற்ற கண்ணகி காலனியை சேர்ந்த பால்ராஜ்(20), தினேஷ்குமார் 26, வினோத்ராஜா 21, ஆகியோரை கைது செய்தனர். மேலும், அங்கிருந்து தப்பி ஓடிய சிவகாசி அய்யப்பன் காலனியை சேர்ந்த விக்னேஷ்வரன் (எ)விக்கி என்பவரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!