News August 2, 2024
விருதுநகர் மாவட்டத்தை கண்காணிக்க ஆணை

வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை கண்காணிக்கவும்,மழை நேரங்களில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
JUST IN விருதுநகரில் எச்சரிக்கை.. மஞ்சள் அலர்ட்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை வருகிறது. இந்நிலையில் விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல், நாளை (நவ 24) விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
News November 23, 2025
விருதுநகர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்<
News November 23, 2025
ஸ்ரீவி. நகராட்சி அலுவலகத்தில் பெண் ஊழியர் மீது தாக்குதல்

ஸ்ரீவில்லிபுத்துார் அசோக் நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் 38. இவரது தாயார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பணியாற்றி இறந்து போன நிலையில் அவரது பண பலன்களை பெற்றுத் தருமாறு கூறி நேற்று முன்தினம் காலை நகராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் சிவகாமியை அசிங்கமாக பேசி பிளாஸ்டிக் சேரால் தாக்கியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.


