News April 25, 2025

விருதுநகர் மாவட்டத்தில் இன்று முதல் திரையிடும் நிகழ்வு

image

விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க விருதுநகர், ஸ்ரீவி, ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டியில் ஏப்.25 முதல் மே.01 வரை சிறந்த திரைப்படங்கள் திரையிடும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 8608204154 என்ற எண்ணில் அழைக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 27, 2025

விருதுநகர்: வாளியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

image

நத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (38). இவரது மனைவி வைதேகி. இவர்களது 2-வது குழந்தை கிருத்வீகா முத்ரா(2)வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வைதேகி பால் வாங்க சென்றிருந்தார். அப்போது குழந்தை கிருத்வீகா முத்ரா பாத்ரூமில் உள்ள தண்ணீர் வாளியில் விளையாடிய போது, தண்ணீரில் தலைகுப்புற விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நத்தம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்

News November 27, 2025

விருதுநகர்: சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள்

image

சேத்துாரில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக வந்த புகாரை அடுத்து போலீசார் ரோந்து செய்தனர். அதில் தளவாய்புரம் பகுதி அருகே நான்கு பேரிடம் சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்ததில் கல்லுாரி மாணவர்கள் தளவாய்புரம் மு.வினோத்குமார் 19, முகவூர் பி.வினோத்குமார், சதீஷ்குமார், முத்துச்சாமி புரத்தை சேர்ந்த இளைஞர் அன்பு ராஜ் 23, நான்கு பேர் என தெரிந்து கைது செய்தனர்.

News November 27, 2025

விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் மதுரை சரக டிஐஜி ஆய்வு

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மதுரை சரக டிஐஜி அபிநவ்குமார் வந்திருந்தார். அப்போது அவர் அமைச்சுப் பணியாளர்கள் கையாளும் போலீசாரின் சம்பள பட்டியல், பொருட்கள் வாங்கப்பட்டவை, போலீசாரின் போக்குவரத்து பயணப்படி ஆவணங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும், நீதிமன்ற வழக்குகள் உட்பட பல்வேறு துறை சார்ந்த ஆவணங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து டிஐஜி காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

error: Content is protected !!