News December 20, 2024
விருதுநகர் புதிய துணைகாவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய பவித்ரா வேடசத்திரத்திற்கு பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, நெல்லை மாவட்டம் வள்ளியூரில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய யோகேஷ் குமார் விருதுநகருக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய துணை காவல் கண்காணிப்பாளராக யோகேஷ் குமார் நேற்று(டிச.19) பொறுப்பேற்றுக் கொண்டார்.
Similar News
News September 8, 2025
விருதுநகர்: 35 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை

விருதுநகர் மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. சம்பளம்: 35,000/-. வயது வரம்பு: 21-40 வயது விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <
News September 8, 2025
விருதுநகரில் அடுத்தடுத்த கொலைகளால் அதிர்ச்சி

விருதுநகர் அருகே குள்லூர்சந்தை பகுதியில் நேற்று இளைஞர் நாகராஜ் என்பவர் முன்விரோதம் காரணமாக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள வரத்து கால்வாயில் வீசப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் குடும்ப பிரச்சினை காரணமாக சகோதரர் மகனை தந்தை மற்றும் சகோதரர் ஆகிய இருவர் கொலை செய்தது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 2 கொலைகள் நடந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News September 8, 2025
விருதுநகரில் இலவசமாக வக்கீல் வேண்டுமா?

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இதை SHARE பண்ணுங்க.