News April 21, 2025
விருதுநகர் தேர்தல் வழக்கை புதிதாக விசாரிக்க உத்தரவு

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி விஜயபிரபாகரனும், தனக்கு எதிராக வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி மாணிக்கம் தாகூரும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை தொடக்கத்தில் இருந்து புதிதாக விசாரிக்க இன்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
சிவகாசியில் கூடுதல் ஆய்வு குழு

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசி பகுதியில் பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமடைந்துள்ளது. விதிமீறலை கண்காணித்து தடுக்க ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கூடுதலாக மேலும் 6ஆய்வு குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். இக்குழுவில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறையினா் இடம்பெற்றுள்ளனர்.
News September 12, 2025
தற்செயல் விடுப்பு போராட்டம் – 1473 ஊழியர்கள் ஆப்செண்ட்

விருதுநகர் மாவட்டத்தில் ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தற்செயல் விடுப்பு போராட்டத்தில், மாவட்ட முழுவதிலும் 1473 பேர் ஆப்செண்ட் ஆகினார். இதன்காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
News September 12, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் – கலெக்டர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (13.09.2025) நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்.