News May 7, 2025

விருதுநகர்: தேசிய சுகாதார குழுமத்தில் வேலை

image

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்(1), நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர்(1), சோசியல் ஒர்க்கர்(1) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மே.9 க்குள் நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 29, 2025

விருதுநகரில் 2150 போலீசார் பாதுகாப்பு பணி

image

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் 2150 போலீசார் வாகன சோதனை பாதுகாப்பு மற்றும் ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக விருதுநகர், அல்லம்பட்டி, பந்தல்குடி ராமலிங்காமில், சாத்தூர் பகுதியில் தோட்டிலோகன்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அழகாபுரி, திருச்சுழி பகுதியில் க.விலக்கு உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.

News October 29, 2025

“அறிவும் வளமும்” என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்ட இலச்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (29.10.2025) 4வது விருதுநகர் புத்தகத் திருவிழா 2025 நடைபெறுவதை முன்னிட்டு, “அறிவும் வளமும்” என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்ட இலச்சினை (LOGO) மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா வெளியிட்டார். நவம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

News October 29, 2025

விருதுநகர்: G Pay / PhonePe பயன்படுத்துகிறீர்களா?

image

விருதுநகர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!