News April 19, 2025
விருதுநகர்: இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE IT*
Similar News
News November 22, 2025
விருதுநகர் வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News November 22, 2025
ஸ்ரீவி.யில் வீட்டின் முன்பு நிறுத்திய பைக் அபேஸ்

ஸ்ரீவில்லிபுத்துார் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் அருண்குமார் 23. இவர் நவ.18 இரவு தனது வீட்டின் முன்பு டூவீலரை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் டூ வீலரை காணவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தனிப்படை போலீசார் தேடுதலில் மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சந்தோஷ் 18 ,, 17 வயது சிறுவனும் டூவீலரை திருடி சென்றது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
News November 22, 2025
விருதுநகர்: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


