News April 16, 2024
விருதுநகர் அருகே 10 பேர் சிக்கினர்
சிவகாசி அருகே மாரனேரி சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் சின்ன முத்தையா (54). இவர் சில நாட்களுக்கு முன் கிராமத்தில் நடந்த ஊர் பொதுக்கூட்டத்தில் நாட்டாமையை எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக நேற்று வீட்டில் இருந்த சின்ன முத்தையாவை நாட்டாமை பெருமாள் குடும்பத்தினர் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.காயமடைந்த சின்ன முத்தையா புகாரில் 10 பேர் மீது வழக்கு.
Similar News
News November 20, 2024
விடுமுறை: பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம்!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மிதமான மழை பெய்துள்ளதால் இன்று(நவ.20) பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
வரதட்சணை கொடுமை செய்த 8 பேர் மீது வழக்கு
சிவகாசி டி. மானகசேரியை சேர்ந்தவர் மாரிராஜ் சர்க்கரைத்தாய் தம்பதி. திருமணத்தின் போது 30 பவுன் நகை வரதட்சணையாக சர்க்கரைதாய் வீட்டினர் வழங்கிய நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் மாரிராஜ், அவரது பெற்றோர், சகோதரர்கள் உள்ளிட்டோர் கொடுமை செய்துள்ளனர். மனஉளைச்சலடைந்த சர்க்கரைத்தாய் சிவகாசி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கணவர் மாரிராஜ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
News November 19, 2024
12 வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் 12 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பெற்றுள்ளது. குறிப்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் வசந்தி, ஆமத்தூர் பகுதிக்கும், அருப்புக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் பணிபுரிந்த சொர்ணலட்சுமி அருப்புக்கோட்டை வருவாய் ஆய்வாளராகவும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.