News April 14, 2024
விருதுநகர் அருகே விபத்து: ஒருவர் பலி

திருச்சுழி அருகே கனையமறித்தான் கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன்(58). இவர் நேற்று தேளி – தர்மம் சாலையில் ஆட்டோ ஓட்டி சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
விருதுநகர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

விருதுநகர் மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு.<
News November 12, 2025
ஊஞ்சல் உற்சவத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஊஞ்சல் உற்சவம் நவ.8 அன்று தொடங்கியது. இந்நிலையில் 4 – ம் நாளான நேற்று கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
News November 12, 2025
விருதுநகர்: அரசு தேர்வர்கள் கவனத்திற்கு

விருதுநகரில் குரூப்-II/IIA முதன்மைத்தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இலவச பயிற்சி வகுப்பு நவ.10 முதல் நடைபெற உள்ளது. வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/xzgDJcXbC6zQw6H98 மூலம் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.


