News March 21, 2024
விருதுநகர் அருகே விபத்து; உடல் நசுங்கி மரணம்

சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம்.மனைவி ஜோதி (37).நேற்றுமுன்தினம் தந்தை நாகராஜ் உடன் சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் டூவீலரில் தனியார் திரை அரங்கம் வழியாக சென்று கொண்டிருந்தார்.பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது. வாகனம் ஜோதியின் மீது ஏறி இறங்கியது. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
Similar News
News September 15, 2025
விருதுநகர்: மாநிலத்திலேயே மூன்றாவது இடம்

மாநிலத்திலேயே அதிக உடல் உறுப்புகள் தானம் பெற்ற மருத்துவமனைகளில் விருதுநகர் அரசு மருத்துவமனை கல்லூரி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனை கல்லூரிகளில் விருதுநகர் அரசு மருத்துவமனை கல்லூரி உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது. மேலும் கடந்த ஆண்டு உடல் உறுப்பு தானம் இங்கிருந்து வழங்கப்பட்டதில் ஏராளமான நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 15, 2025
விருதுநகர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

விருதுநகர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்குடாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News September 15, 2025
விருதுநகரில் 741 பட்டாசு ஆலைகளுக்கு நோட்டீஸ்

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஆகஸ்ட் மாதம் வரை பட்டாசு ஆலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிறிய அளவில் விதிமீறல் இருந்த 741 ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விதிமுறையை மீறியதாக 85 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் மா.கருப்பசாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்த தகவலை பெற்றுள்ளார்.