News March 19, 2024
விருதுநகர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

விருதுநகர் அருகே மீசலூர் பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி (54). இவர் ஆடு வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு விருதுநகர் சிவகாசி சாலையை கடக்க முயன்ற பொழுது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் மாரிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி அன்னலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு.
Similar News
News April 19, 2025
முழு வீச்சில் தயாராகும் பொருட்காட்சி திடல்

சிவகாசி சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி முதல் ஒரு மாதம் பிரம்மாண்ட பொருட்காட்சி நடைபெற உள்ளது. விளாம்பட்டி சாலையில் நடைபெற உள்ள பொருட்காட்சிக்கான முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க அதிநவீன பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற உள்ளன. தற்போது பொருட்காட்சி திடல் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
News April 19, 2025
விருதுநகரில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள்

▶️திருச்சுழி பூமிநாதர் சுவாமி திருக்கோயில்
▶️காமராஜர் நினைவு இல்லம்
▶️சஞ்சீவி மலை
▶️குக்கன்பாறை
▶️செண்பகத்தோப்பு அணில் சரணாலயம்
▶️அய்யனார் அருவி
▶️சதுரகிரி மலை
▶️பள்ளிமடம்
▶️பிளவாக்கல் அணை
▶️இருக்கன்குடி மாரியம்மன் கோயில்
▶️ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
News April 19, 2025
விருதுநகரில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை

விருதுநகரில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே <