News March 20, 2024
விருதுநகர் அருகே போக்குவரத்து நெரிசல்

சிவகாசி மாநகராட்சிகள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். பாய்ஸ் ஸ்கூல் அருகே காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் அதிக அளவில் வருவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து ஏற்படுகிறது. இந்தப்பகுதியில் முறையாக போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாததே இதுபோன்ற போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Similar News
News November 21, 2025
விருதுநகர்: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியமேம்பாட்டுச் சங்கம் மூலம் 2024-2025-ஆம் ஆண்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெறதகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் tn.gov.in என்ற இணைய தளம் மூலம் நவ.28 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

விருதுநகர் மக்களே, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க இங்கு <
News November 21, 2025
விருதுநகர்: தகாத உறவு.. போலீஸ் ஏட்டு ‘சஸ்பெண்ட்’

விருதுநகர் மாவட்டம், மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த இளம்பெண்ணுடன், போலீஸ் ஏட்டு ஜெயபாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அக்., 30 இரவு, 11:30 மணிக்கு மேல், விருதுநகர் அருகே இளம் பெண்ணின் வீட்டில் தனிமையில் இருந்தனர். அப்போது, பெண்ணின் கணவர், உறவினர்கள் ஜெயபாண்டியை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினார். இதையடுத்து ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


