News March 29, 2024

விருதுநகர் அருகே தாக்குதல்

image

அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(45). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு குடும்பத்தாருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தாலுகா போலீசார் நேற்று மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News July 11, 2025

விருதுநகர் மாவட்டத்தில் 3 நாள் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஈபிஎஸ்

image

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் வரும் ஆகஸ்டு மாதம் 4,5,6 ஆகிய 3 நாட்கள் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த பிரசாரத்தின்போது அவர் 41 கிலோமீட்டர் நடந்து சென்று 2 லட்சம் மக்களை சந்திக்கிறார். மேலும் சிவகாசி பகுதியை சேர்ந்த பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், ராஜபாளையத்தில் உள்ள மா விவசாயிகள், விசைத்தறி தொழிலாளர்களை சந்திக்கிறார்.

News July 11, 2025

சிவகாசியில் குரூப் 4 தேர்வு எழுதுவோரின் கவனத்திற்கு

image

திருத்தங்கல் பெருமாள் கோயில் தேரோட்டம் நாளை(ஜூலை.12) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காலை 8 மணி முதல் 10 மணி வரை சிவகாசி – விருதுநகர் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் மாற்று வழிச்சாலையில் செல்லும். இதனால் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல கால தாமதம் ஏற்படுவதால் அதற்கு ஏற்ப தேர்வு மையத்திற்கு செல்ல தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT

News July 11, 2025

சிவகாசி: ரகசிய ஆய்வில் பட்டாசு தயாரித்த 9 பேர் கைது

image

சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்து அனுப்புவதாக கிடைத்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் ரகசிய ஆய்வு செய்தனர். அதில் விஸ்வநத்தம் பகுதியில் 3 பேர், மீனம்பட்டியில் 4 பேரை கைது செய்தனர். இதேபோல் தங்கள் வீட்டின் அருகே தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்த மீனம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் பட்டாசு தயாரித்ததாக ஒரே நாளில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!