News March 27, 2024
விருதுநகர் அருகே செல்பி பாயிண்ட் திறப்பு

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இன்று (27.3.24) 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி செல்பி பாயிண்ட் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு இந்த செல்பி பாயிண்ட் திறந்து வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற துண்டு பிரசுரங்களையும் தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
Similar News
News December 19, 2025
விருதுநகர்: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

விருதுநகர் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க.
News December 19, 2025
விருதுநகரில் பள்ளி மாணவர் தற்கொலை

விருதுநகர் RS நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரின் மகன் விஸ்வ பாண்டி 15. இவர் 10th படித்து வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதில் மன வருத்தமடைந்து நேற்று வீட்டின் கபோர்டு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். மேலும் சத்தம் வராமல் இருக்க வாயில் செல்லோ டேப் ஒட்டியும், இரு கால்களையும் கட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இவரின் உடலை மீட்ட விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 19, 2025
கிளைகளை வெட்டி சேதப்படுத்தியவர் மீது வழக்கு

மம்சாபுரம் பகுதி சேர்ந்தவர் கருப்பையா. இவர் வாழைகுளம் பகுதியில், மாந்தோப்பு வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் தோப்பிற்கு சென்று பார்த்தபோது அருகில் தோப்பு வைத்திருக்கும் கருப்பையா என்பவர் மாமரங்களின் கிளைகளை சேதப்படுத்தியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து மம்சாபுரம் போலீசார் மம்சாபுரம் கந்தசாமி பிள்ளை தெருவை சேர்ந்த கருப்பையா மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


