News March 26, 2025

விருதுநகரில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் அவ்வப்போது பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் மாவட்டங்களான விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணவும்..

Similar News

News September 14, 2025

சிவகாசியில் பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி

image

சிவகாசி, மீனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி(49). இவர், சிவகாசி பேருந்து நிலையத்தில் (சனிக்கிழமை) நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது எரிச்சநத்தத்திலிருந்து வந்த தனியார் பேருந்து ராஜேஸ்வரி மீது மோதியதில் அவர், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து சிவகாசி நகர் போலீசார் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநர் தங்கப்பாண்டி (28), நடத்துநர் கிருஷ்ணசாமி (43) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

News September 14, 2025

ஸ்ரீவி ஊஞ்சல் சேவையில் ஆண்டாள், ரங்கமன்னார்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆவணி மாத 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னாருக்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து ஊஞ்சல் சேவையில் சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News September 13, 2025

சிவகாசி: ஆன்லைன் பட்டாசு விற்பவர்களுக்கு எச்சரிக்கை

image

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதளம் மூலம் பட்டாசு ஆர்டர் பெறுபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே ஆன்லைன், இணையதளம் மூலமாக பட்டாசு ஆர்டர் பெறுவது, விற்பனை செய்பவர்கள் மீது உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு, கிரிமினல் வழக்கு, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!