News April 18, 2025
விருதுநகரில் 4 பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் – தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் 4 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதில் நரிக்குடி மறையூர் சத்திரம், ராஜபாளையம் வட்டம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம், புடைப்புச் சிற்பங்கள், மம்சாபுரம் நாயக்கர் கால மண்டபம், பிள்ளையார்நத்தம் மண்டபம் ஆகியவை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட உள்ளது.
Similar News
News November 14, 2025
ஊஞ்சல் உற்சவத்தில் ஆண்டாள், ரங்கமன்னார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ஊஞ்சல் உற்சவம் நவ.8 அன்று தொடங்கியது. இந்நிலையில் 6- ம் நாளான நேற்று இரவு கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
News November 14, 2025
விருதுநகர்: இளைஞர்களுக்கு அழகுக்கலை பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை தேர்வு செய்து ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News November 14, 2025
விருதுநகர் அரசு மருத்துவமனையில் வேலை

விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவ ஆலோசகர் 3, ஹோமியோபதி மருத்துவர் 1, பல்நோக்கு பணியாளர்கள் 4, சிகிச்சை உதவியாளர் 4 ஆகிய பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் http://virudhunagar.nic.in முலம் பதிவிறக்கம் செய்து நவ. 14க்குள் மாவட்ட சுகாதார நல அலுவகத்தில் சமர்பிக்க வேண்டும்.


