News March 27, 2024

விருதுநகரில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு.. 492 பேர் ஆப்சென்ட்!

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை விருதுநகர் சிவகாசி இரு கல்வி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் 22,005 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 10,589 மாணவர்கள் 10,924 மாணவிகள் என 21,513 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 492 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

Similar News

News November 7, 2025

விருதுநகர் வேலைவாய்ப்பு மையம் சார்பில் இலவச பயிற்சி

image

விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group-II/IIA முதன்மைத் தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இலவச பயிற்சி வகுப்பு 10.11.2025 முதல் நடைபெற உள்ளது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 6, 2025

விருதுநகர்: ரூ.5 லட்சம் இலவச இன்சூரன்ஸ்! APPLY பண்ணுங்க

image

விருதுநகர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News November 6, 2025

விருதுநகர்: கைதியை தப்ப விட்ட 3 போலீசார் சஸ்பென்ட்

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் பாலமுருகன்(42).‌ இவர் மீது பந்தல்குடி காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு உள்ள நிலையில் கேரளா சிறையில் இருந்த அவரை அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு பந்தல்குடி காவல் நிலையத்தை சேர்ந்த மூன்று போலீசார் மீண்டும் கேரளா சிறைக்கு கொண்டு சென்ற போது அவர் தப்பி ஓடினார். இதனையடுத்து அந்த 3 போலீசாரையும் எஸ்பி கண்ணன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

error: Content is protected !!