News April 1, 2025
விருதுநகரில் வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டத்தில் பயின்ற ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் பட்டதாரிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் மற்றும் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான முகாம் 09.04.2025 அன்று காலை 8.30 மணி முதல் விருதுநகர் மாவட்டம், வீரசோழன் கிராமத்தில் உள்ள அல் அமீன் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. வேலைத்தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
Similar News
News December 14, 2025
விருதுநகர்: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

விருதுநகர் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!
News December 14, 2025
சிவகாசியில் பட்டாசு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சிவகாசி மீனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளியான மதியழகன் (55). இவர் தீராத வயிறு வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று அவருக்கு வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி அல்போன்ஸ் மேரி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News December 14, 2025
விருதுநகர்: 3422 வழக்குகளுக்கு தீர்வு.. ரூ.13.94 கோடி இழப்பீடு

விருதுநகர் மாவட்ட நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 2024ல் நடந்த விபத்தில் பலியான ஸ்ரீவி.யைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அஜய் பிரசாத் குடும்பத்திற்கு ரூ.39 லட்சம் இழப்பீடு, 2018ல் ஸ்ரீவி. அருகே நடந்த கார் விபத்தில் பலியான ஐடி ஊழியர் ஹரிஹரசுதன் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு என மாவட்டத்தில் 3422 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.13.94 கோடிக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடபட்டது


