News August 4, 2024

விருதுநகரில் பிறந்த 7,991 குழந்தைகள், தாய் நலம்

image

விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி என 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இதில் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 22 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. இதில் கடந்த ஏப்.2023 முதல் மார்ச்.2024 வரை மொத்தம் 7,991 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அனைத்து தாய் மற்றும் சேய் நலம் காக்கப்பட்டுள்ளது. 2022 – 23 அறிக்கைப்படி 8,483 குழந்தைகள் பிறந்ததில் 6 தாய்கள் உயிரிழந்துள்ளனர்.

Similar News

News November 17, 2025

விருதுநகர் அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்

image

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரசாமி என்பவருக்கும் புறம்போக்கு இடத்தில் நடை பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. இதனையடுத்து கருப்பசாமி வீட்டில் இருந்தபோது சுந்தரசாமி அங்கு சென்று கையால் தாக்கி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வத்திராயிருப்பு போலீசார் சுந்தரசாமி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 17, 2025

விருதுநகர் மக்களே… இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..

image

1. டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர் 9444184000
2. இரா.ராஜேந்திரன் மாவட்ட வருவாய் அலுவலர் 04562-252348
3. டி.கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9498101455
இந்த முக்கியமான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க…

News November 17, 2025

பிளவக்கல் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

image

வத்ராப் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் 17 வருவாய் கிராமங்களில் உள்ள 40 கண்மாய் நிரம்பி 7,219 ஏக்கர் விவசாய நிலம், பெரியாறு பிரதானக கால்வாய் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தொடர் மழை காரணமாக 47 அடி கொண்ட பிளவக்கல் அணை 41 அடியை தாண்டியது. இதையடுத்து அணையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு அமைச்சர் KKSSRR ராமச்சந்திரன் தண்ணீரை திறந்து வைக்கிறார்.

error: Content is protected !!