News March 27, 2025

விருதுநகரில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

image

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி வகுப்புகள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. முதல் தொகுப்பு ஏப்.01 – ஏப்.13, 2ம் தொகுப்பு ஏப்.15 – ஏப்.27, 3ம் தொகுப்பு ஏப்.29 – மே11, 4ம் தொகுப்பு மே.13 – மே.25, 5ம் தொகுப்பு மே.27 – ஜூன்.8 வரை வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 9751393412 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 6, 2025

விருதுநகர் அருகே ரூ.15 லட்சம் மோசடி

image

வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கீழக்கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த பாண்டி, பெருமாளம்மாள், ஈஸ்வரி, ராணி, விஜயகரிசல்குளத்தை சேர்ந்த சூரியகலா ஆகியோர் போலி நகையை அடகு வைத்து ரூ.15.94 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சாத்துார் ஜே. எம் 2 நீதிமன்ற உத்தரவுப்படி வெம்பக்கோட்டை போலீசார் பாண்டியை கைது செய்து மற்ற 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 6, 2025

விருதுநகர் சுகாதாரத்துறையில் வேலை ரெடி… APPLY NOW

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் புறத்தொடர்பு பணியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் தகுதியுடையோர் www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News December 6, 2025

விருதுநகர்: B.E முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

விருதுநகர் மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, PG படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!