News February 16, 2025
விருதுநகரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பிப்.21 அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்ட தனியார் பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அதற்கான இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கல்வி சான்று, ஆதார் நகலுடன் கலந்து கொள்ளலாம்.
Similar News
News September 17, 2025
அருப்புக்கோட்டையில் சாமி சிலை உடைப்பு

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலையம்பட்டி அருகே பொய்யாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது இருவாக்காளியம்மன் கோவில். இன்று காலையில் இருவக்காளியம்மன் சுவாமியின் சிலை உடைக்கப்பட்டு இருப்பது கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
விருதுநகர் மாவட்டத்தின் அடிப்படை உதவி எண்கள்

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -04562 – 252600, 252601, 252602, 252603
▶️காவல் கட்டுப்பாட்டு அறை -100
▶️விபத்து உதவி எண் -108
▶️தீ தடுப்பு, பாதுகாப்பு -101
▶️விபத்து அவசர வாகன உதவி -102
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️பேரிடர் கால உதவி – 1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு பற்றி தகவல் அளிக்க உதவி எண் – 9443967578 *ஷேர் பண்ணுங்க
News September 17, 2025
விருதுநகர்: காவல்துறை சிசிடிவி கேமரா சேதம், 4 பேர் கைது

சித்தலக்குண்டு பேருந்து நிறுத்தத்தில் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் நேற்று இந்த சிசிடிவி கேமராக்களை மர்மநபர்கள் சேதப்படுத்தியதாக தகவல் வந்தது. இந்நிலையில் திருச்சுழி போலீசாரின் விசாரணையில் கேமராக்களை சேதப்படுத்தியதாக வயல்சேரியை சேர்ந்த மணிகண்டன், சித்தலக்குண்டை சேர்ந்த தமிழ்சிங்கம், ராம்குமார் மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.