News April 9, 2025
விருதுநகரில் டாஸ்மாக் கடைகள் தற்காலிகமாக மூடல்

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை மகாவீரர் ஜெயந்தி தினமான நாளை(ஏப்.10) ஒரு நாள் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். உத்தரவினை மீறி செயல்பட்டால் உரிமதாரர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 24, 2025
திருச்சி செல்லும் ஆண்டாள் சூடிய மாலை பட்டு வஸ்திரம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சித்திரை திருவிழாவில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தின் போது நம் பெருமாள், ஆண்டாள் கூடிய மாலை அணிந்து எழுந்தருளுவது வழக்கம். இதற்காக இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் பூ மாலை ஆகியவை திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
News April 24, 2025
9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

சிவகாசி பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாரீஸ்வரன் (25) என்ற இளைஞர் அவரை வெளியூருக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. மாணவி மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் மாணவியை மீட்ட போலீசார் மாரீஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News April 24, 2025
விருதுநகரில் கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம்

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் +2 பொது தேர்வு எழுதிய மாணவர்களின் 100% உயர்கல்வி சேர்க்கையை வலியுறுத்தி ஏப்.27 அன்று நடைபெற இருந்த கல்லூரிக்கனவு விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம் மே.1க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள +2 தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்து கொள்ளலாம். முதல் பரிசு ரூ.40,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9698810699 இல் அழைக்கலாம்.