News April 17, 2025

விருதுநகரில் சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பரிசு

image

சர்வதேச கூட்டுறவு ஆண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட பொதுமக்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், துறை அலுவலர்களிடமிருந்து கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பாடல், இசையமைக்கப்பட்டு, 5 நிமிடங்கள் ஒலிப்படப்ப கூடிய வரையில் இருக்க வேண்டும். இதில், சிறந்த பாடலுக்கு ரூ.50,000 பண முடிப்பு வழங்கப்படும். பாடலை tncu08@gmail.com மின்னஞ்சலில் மே 30க்குள் அனுப்ப வேண்டும்.

Similar News

News November 17, 2025

விருதுநகரில் FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இதை SHARE பண்ணுங்க.

News November 17, 2025

விருதுநகர் அருகே பாட்டி, பேரன் பரிதாப பலி

image

திருச்சுழி அருகே குள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி 55. இவருக்கு நேற்று இரவு 8:30 மணியளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பேரன் நாகேந்திரனை, 25, அழைத்துக்கொண்டு டூவீலரில் கல்லூரணியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.
ஊருக்கு அருகே எதிரே வந்த தனியார் மில் வேன் டூவீலர் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். எம்.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 17, 2025

விருதுநகர்: கோஷ்டி மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

image

அருப்புக்கோட்டை மறவர் தெருவை சேர்ந்தவர்கள் வினோத்குமார், விக்ரம், விமல், அழகர் ஆகியோர் உடைய ராஜனை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். வினோத்குமார் நண்பர் ராஜ்குமார் தகராறு செய்தவர்களிடம் கேட்ட போது ராஜ்குமாரை 4 பேர் அருவாளால் வெட்டியதில், மதுரை GH-யில் சேர்க்கப்பட்டார் போலீசார் இருதரப்பை சேர்ந்த அழகர், 25, விமல், 22, விக்ரம், 23, மற்றும் விஜயராஜ், 19, மாரிச்சாமி, 19, உள்ளிட்டவரை கைது செய்தனர்.

error: Content is protected !!